சிறுவர்களுக்கு பாதுகாப்பான இணையத் தேடலை ஏற்படுத்தி தர....
இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான்.
இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது.
பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன.
இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது.
மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில் பெற்றோர்களுக்கும் சற்று சிரமமான செயல்பாடாக உள்ளது. இயலாததும் கூட.
பெற்றோர் தடை இடுகையில் அதனை மீற வேண்டும் என்ற இயல்பு சிறுவர்களுக்கு இயல்பாகவே தோன்றுவது இயற்கையே.
இந்தச் சூழ்நிலையைச் சமாளிக்க நமக்கு K9 Web Protection என்னும் புரோகிராம் நமக்கு உதவுகிறது. இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராம் வீடுகளில் பயன்படுத்தும் கணனிகளில் கட்டுப்பாடுகளை விதிக்க உதவுகிறது. இதன் மூலம் எப்பொழும் கணனி கட்டுப்பாட்டுடன் வைக்க முடியும்.
உங்கள் குழந்தைகளை இணையம் தரும் தீமைகளிலிருந்து பாதுகாக்க உதவிடும்.
இதன் சிறப்பம்சங்களாவன:
பாலியல், போதை மருந்து, தனிநபர் டேட்டிங், வன்முறையைப் போதிப்பது, வெறுப்பினை வளர்ப்பது, இனவேறு பாட்டினைத் தூண்டுவது என 70க்கும் மேற்பட்ட பல்வேறு பிரிவுகளாக, இணைய தளங்களைப் பிரித்து வைத்து தடுக்கலாம்.
குழந்தைகளின் வயதின் அடிப்படையில், தடுப்பு நிலைகளை அமைக்கலாம். அனைத்து தேடல் சாதனங்களிலும், SafeSearch என்ற ஒன்றை இயக்கி வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் இணையத் தொடர்பினை ஏற்படுத்த இயலாமல் செட் செய்திடலாம்.
எப்போதும் அனுமதி மற்றும் எப்போதும் தடை செய்திடு என இருவகைகளாக இணையத்தளங்களைப் பிரித்து அமைக்கலாம். பெற்றோர் அமைத்திடும் பாஸ்வேர்ட் மற்ற பாஸ்வேர்ட்களையும் மீறி இருக்கும் வகையில் அமைக்கலாம்.
கணனி தொழில் நுட்பம் சற்று அதிகம் தெரிந்து பயன்படுத்துபவர்கள் கூட, மீட்டெடுக்க முடியாத தடைகளை உருவாக்கலாம். தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்த்தால், அது குறித்த அறிக்கை தரும்படி அமைத்திடலாம். விண்டோஸ் மட்டுமின்றி, மேக் கணனிகளில் இயங்கும் வகையிலும் இது தரப்படுகிறது.
K9 Web Protection என்ற இந்த புரோகிராம், மைக்ரோசாப்ட் விண்டோஸ் 7, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் எக்ஸ்பி, மேக் ஓ.எஸ். எக்ஸ் 10.4.7 மற்றும் அதற்கும் மேற்பட்ட சிஸ்டங்களில் இயங்குகிறது.
இதனை தரவிறக்கம் செய்து நிறுவச் செய்திடுகையில், லைசன்ஸ் கீ தரும்படி இந்த புரோகிராம் கேட்கும்.
download செய்ய கீழே click செய்யவும்
இணையதள முகவரி
02.08.2012
| கூகுள் தேடலில் கால வரையறை வசதி |
| இன்று
தகவல் தேடுதலுக்குப் பலரும் பயன்படுத்துவது கூகுள் தேடல் தளத்தை தான். நம்
தேடலும், கூகுள் தரும் முடிவுகளும் ஆச்சரியத்தை அளித்தாலும், சில
வேளைகளில் நாம் தேடும் வகையில் தகவல் கிடைக்காது. தேவையற்ற தகவல்கள் வந்து குவிக்கப்பட்டிருக்கும். நாம் அண்மையில் 20 நாட்களுக்குள் வந்த தகவல்களைத் தேடுவோம். ஆனால் கூகுள் எப்போதோ, சில மாதங்களுக்கு, ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தகவல்களையும் காட்டும். இவ்வாறு இல்லாமல் குறிப்பிட்ட நாட்களுக்குள் இணையத்தில் பதித்த தகவல்களை மட்டும் காட்டுமாறு நாம் கூகுளுக்கு ஆணையிடலாம். 1. முதலில் நாம் தேடும் தேடல் சொல் அல்லது சொற்களை கூகுள் சர்ச் பீல்டில் அல்லது டூல் பாரில் அமைக்க வேண்டும். 2. முடிவுகளுக்கான பட்டியல் காட்டப்படும். இதில் இடது பக்கப் பிரிவில் உள்ள Show search tools என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கால வரையறைகளை அமைக்கும் வகையில் சில ஆப்ஷன்ஸ் விரிக்கபடும். 3. இதில் Any time என்பது மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். இதன் கீழாக Past hour, Past 24 hours, Past 2 days என தொடர்ந்து பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும். 4. இதன் கீழாக Custom range என்பதில் கிளிக் செய்திடவும். 5. உடனே காலண்டர் ஒன்று காட்டப்படும். இதில் எந்த நாளிலிருந்து பதிக்கப்பட்ட தகவல் வேண்டும் என்பதை From பீல்டில் அமைப்பதன் மூலம் வரையறை செய்திடலாம். 6. நீங்கள் பீல்டை காலியாக விட்டு விட்டால், இன்று வரை பதிக்கப்பட்ட தகவல்கள் கிடைக்கும். இல்லை எனில் இங்கும் நாள் ஒன்றைக் குறிப்பிடலாம். 7. அடுத்து Search என்பதில் கிளிக் செய்தால், நாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் பதியப்பட்ட தகவல்கள் நமக்குக் கிடைக்கும். இது நமக்கு மிகவும் உதவும் ஒரு தேடல் வசதி. இதன் மூலம் நாம் விரும்பும் வகையில் முடிவுகளைப் பெறலாம். |
.jpg)

No comments:
Post a Comment