03>உலகில் இன்று

01.08.2012
கைத்தொலைபேசி செய்தி கைபேசி கோபுரத்தால் புற்று நோய் வரும் அபாயம்!


குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் மொபைல்போன் டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

டெல்லியை சேர்ந்த இராமநாத் கார்க். இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் மொபைல்போன் டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
குடியிருப்பு பகுதிகளில் மொபைல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருக்கிறார். தனது மனுவிற்கு வலு சேர்க்கும் காரணங்களையும் அவர் மனுவில் கூறியிருக்கிறார்.

30 வயதான தனது மகன் புற்றுநோய் பாதிப்பால் இறந்துவிட்டதாகவும், இதற்கு தனது வீட்டின் மேல் அமைக்கப்பட்டிருந்த மொபைல்போன் கோபுரத்திலிருந்து வெளியான (3G)வீரியம் மிக்க கதிர்வீச்சே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2009ம் ஆண்டு தனது வீட்டு மாடியில் மொபைல்போன் கோபுரம் அமைக்கும்போதே (3G)வீரியம் மிக்க கதிர்வீச்சை வெளியிடும் கோபுரம் அமைக்கக் கூடாது என்று கூறியதாகவும், ஆனால், அப்போது வந்த தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகள் இதற்கு ஒத்துக் கொண்டு பின்னர் ஏமாற்றிவிட்டாதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தனது மகன் இறந்ததற்காக சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனம் 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு அளிக்கவும் உத்தரவிடுமாறும் தனது மனுவில் ராமநாத் கார்க் கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனை மற்றும் பள்ளிக் கூடங்களிலிருந்து 50 மீட்டருக்கு அப்பால் மொபைல்போன் கோபுரங்களை அமைக்கவும் உத்தரவிடுமாறு அவர் தனது மனுவில் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த மனு மீது உரிய விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 





31.07.2012
HP அறிமுகப்படு​த்தும் புதிய Slate 8 கணினிகள்


கணனிகளை உற்பத்தி செய்யும் பல்வேறு நிறுவனங்களுக்கு மத்தியில் முன்னணியில் திகழும் நிறுவனங்களில் ஒன்றான HP ஆனது Slate 8 எனும் நவீன ரக கணனிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


விண்டோஸ் இயங்குதளத்தில் செயற்படவல்ல இந்த புதிய கணனியானது 10.1 அங்குல திரையைக் கொண்டதாகக் காணப்படுவதுடன், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள மின்கலமானது தொடர்ச்சியாக எட்டு தொடக்கம் பத்து மணித்தியாலங்கள் வரை செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.






18.07.2012

கோகோ கோலா மற்றும் பெப்சியில் ஆல்கஹாலா? அதிர்ச்சி தகவல்!


கோக கோலா மற்றும் பெப்சி குளிர்பானங்களில் ஆல்கஹால் கலந்திருப்பதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் ஒரு லிட்டர் பாட்டிலில் 10 மில்லிகிராம் அளவுக்கே இது இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரான்ஸைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. இதற்காக 19 விதம் விதமான கோக் பாட்டில்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் பத்து பாட்டில்களில் ஆல்கஹால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும் ஒவ்வொரு ஒரு லிட்டர் பாட்டிலிலும் 10 மில்லிகிராம் அளவுக்கு ஆல்கஹால் கலந்திருப்பதாக தெரிய வந்தது. இதேபோல பெப்சியிலும் ஆல்கஹால் இருக்கிறதாம்.


இதுகுறித்து கோக கோலாவின் பிரான்ஸ் பிரிவு அறிவியல் இயக்குநர் மைக்கேல் பெபின் கூறுகையில், கோக்கில் ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதில் ஓரளவு உண்மைதான். இருப்பினும் இது மிக மிக மென்மையான அளவில்தான் இருக்கும்.

ஆனால் இதை வைத்து கோக்கை மது பானம் என்று கூறி விட முடியாது. இது மென் குளிர்பானம்தான். இந்த குளி்ர்பானத்தை அருந்தலாம் என்று பாரீஸைச் சேர்ந்த இஸ்லாமிய மசூதி ஒன்று சான்றிதழ் அளித்துள்ளது. பெப்சி நிறுவனமும் இதேபோல இத்தகைய குளிர்பானங்களில் மிக மிக சிறிய அளவில் ஆல்கஹால் கலந்திருக்கும் என்பதை ஒத்துக் கொண்டுள்ளது. கோக் 1886ம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. ஆரம்பத்தில் இதை தலைவலி, ஆண்மைக் குறைவுக்கான மருந்தாக பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோக்கில் பெரிய அளவில் ஆல்கஹால் இல்லை என்று கூறப்பட்டாலும் கூட மது அருந்துவதை தடை செய்யும் இஸ்லாமிய நாடுகளில் இனி கோக்குக்கு எதிர்ப்பு கிளம்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.



18.07.2012

சக்கரங்கள் இல்லாமல் பறக்கும் கார் அறிமுகம்

 வோல்க்ஸ்வேகன் எனும் நிறுவனம் பெருகிவரும் கார்களை எதிர்காலத்தில் எப்படி உருவாக்க நினைக்கிறீர்கள் எனும் கேள்வியை சீனாவில் உள்ள மக்கள் பலரிடம் கேட்டறிந்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி அதனை, மக்களின் கார் திட்டம் எனும் தலைப்பில் அவர்கள் வழங்கும் திட்டங்களை உருவாக்குகின்றனர். அதில் ஒரு பெண் வழங்கியிருந்த எதிர்கால கார் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். அதுதான் சக்கரங்கள் இல்லாமல் பறக்கும் இக்கார். இதனை அப்பெண்ணின் பெற்றோர்களிடமே கொடுத்து பரிசோதிப்பது பரிசோதித்துள்ளனர். வீடியோவை பார்த்து இது கிராபிக்ஸ்சில் உருவாக்கப்பட்டிருக்கிறதா அல்லது உண்மையானதா நீங்களே கூறுங்கள்.
http://youtu.be/Ew4Y5HLyT6c 





17.07.2012
 செம்சுங் நிறுவனத்திற்கு நட்ட ஈடு செலுத்தும்படி அப்பிள் நிறுவனத்திற்கு நெதர்லாந்து நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.அப்பிள் நிறுவனமானது செம்சுங் நிறுவனத்தின் காப்புரிமையொன்றினை மீறியுள்ளதினாலேயே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட்கள் இணையத்துடன் தொடர்புகொள்ளும் முறை தொடர்பான காப்புரிமையே மீறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
எனினும் எவ்வளவு தொகையினை அப்பிள் செலுத்தவேண்டும் என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனாலும் அப்பிளின் ஐ போன் மற்றும் ஐ பேட்கள் நெதர்லாந்தில் விற்பனையாகியுள்ள எண்ணிக்கையப் பொறுத்தே நட்ட ஈட்டுத்தொகையும் கணிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தீர்ப்பினை செம்சுங் நிறுவனம் வரவேற்றுள்ளதுடன் தனது தொழில்நுட்ப வசதிகளை அப்பிள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்வதாக செம்சுங் பி.பி.சி ஊடக நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

உலகின் மிகவும் பெறுமதிமிக்க நிறுவனமாக அண்மையில் மாறிய அப்பிள் கடந்த சில காலங்களாகவே பல சட்டரீதியான சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது.இதேபோன்ற வேறொரு சட்டச்சிக்கலுக்கும் அப்பிள் அவுஸ்திரேலியாவில் அண்மையில் முகங்கொடுத்தது.அப்பிள் இறுதியாக வெளியிட்ட ‘ஐ பேட்’ சாதனங்கள் 4 ஜி வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வசதியினைக் கொண்டுள்ளதாக விளம்பரப்படுத்தியது.

எனினும் அச்சாதனங்கள் மேற்குறிப்பிட்ட வசதியினைக் கொண்டிருக்காமையால் அப்பிள் மீது வழக்குத்தொடுக்கப்பட்டது. இதன்போது சுமார் 2.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அப்பிள் நட்ட ஈட்டுத் தொகையாக செலுத்தவும், நீதிமன்றக் கட்டணமாக 305,000 அமெரிக்க டொலர்களைச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. ஸ்மார்ட்போன்கள் மற்றும் டெப்லட் சந்தைகளில் ஜாம்பவான்களாகத் திகழும் செம்சுங் மற்றும் அப்பிள் நிறுவனங்கள் கடந்த பல மாதங்களாக பல சட்டரீதியான சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

அப்பிள் செம்சுங் மீது வழக்குத்தொடர்வதும், செம்சுங் அப்பிள் மீது வழக்குத்தொடர்வதும் வாடிக்கையாகிவிட்டன.  செம்சுங் தனது சாதனங்களின் வடிவத்தையொத்த சாதனங்களைத் தயாரிப்பதாக அப்பிள் பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளதுடன் வழக்கும் தொடந்துள்ளது.பல நாடுகளில் இவ்விரு நிறுவனங்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவ்விரண்டு நிறுவனங்களும் பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு அதன் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென அமெரிக்க நீதிமன்றமொன்று வேண்டுகோள் விடுத்திருந்தது.எனினும் இப்பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இத்தகைய வழக்குகளால் நிறுவனங்கள் இரண்டினதுமே வருவாய் பாதிக்கப்படுவதாக சந்தை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பூகோளமயமாக்கலில் எந்தவொரு நிறுவனங்களும் இன்னொரு நிறுவனத்தைச் சார்ந்திருப்பதும், அவற்றுடன் சேர்ந்து செய்ற்படுவதும் கட்டாயமாகவுள்ளதை மறுக்கமுடியாது.

 

 

16.07.2012

பேஸ்புக்,ட்வீட்டர் ஆகிய சமூக இணையதளங்களை போன்ற ஒரு புதிய சமூக இணையத்தளம் வருகின்ற ரமழான் மாதம் அறிமுகமாகவுள்ளது.

ஹலால் சம்மந்தமான இந்த இணையதளத்திற்கு ‘சலாம் வேர்ல்ட் – 'Salam World’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களுக்கான ஒரு பாதுகாப்பு வலைத்தளமாகவும், பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ளது.

 

 

 15.07.2012

 

கூகுள் நிறுவனம் தனது சேவைகள் சிலவற்றை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது பலருக்கும் சிரமத்தை ஏற்படுத்தலாம்.
தேடுபொறி மூலம் தனது பயணத்தை தொடங்கிய கூகுள் நிறுவனம் இது வரை பல்வேறு வசதிகளை தந்துள்ளது. மேலும் பல நிறுவனங்களையும் கையகப்படுத்தியுள்ளது.

கூகுள் அறிமுகப்படுத்தும் அனைத்து சேவைகளும் வெற்றி பெறுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் கூகுள் தனது சேவைகளில் சிலவற்றை அவ்வப்போது “Spring Cleaning” என்ற பெயரில் நிறுத்திவிடும். தற்போது கூகுள் மேலும் சில சேவைகளுக்கு மூடுவிழா நடத்துகிறது.

Google Talk Chatback: இது வலைத்தளங்களில் Google Chat Widget-ஐ வைக்கும் வசதியாகும். இதன் மூலம் இணையதள உரிமையாளர்கள் தங்கள் வாசகர்களுடன் கூகுள் சாட்டில் உரையாடலாம்.

தற்போது இந்த வசதியை கூகுள் நிறுத்தப்போகிறது. இதற்கு பதிலாக கூகுள் சமீபத்தில் கையகப்படுத்திய MeeboBar-ஐ பயன்படுத்த பரிந்துரை செய்கிறது.
iGoogle: iGoogle என்பது கூகுள் முகப்பு பக்கத்தை நமக்கு பிடித்தவாறு மாற்றிக் கொள்ளும் வசதி. இதில் பல்வேறு Gadget-களை வைத்துக் கொள்ளலாம். இந்த வசதியை அடுத்த வருடம்(2013) நவம்பர் ஒன்றாம் திகதி முதல் நிறுத்தப்போகிறது.

Google Video: கூகுள் நிறுவனம் யூட்யூப் நிறுவனத்தை 2006-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. அதற்கு முன் கூகுள் வீடியோ என்ற பெயரில் வீடியோ சேவை இருந்தது.

2009-ஆம் ஆண்டிலிருந்து கூகுள் வீடியோ தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை நிறுத்திய கூகுள், வரும் ஆகஸ்ட் 20 முதல் அங்குள்ள அனைத்து வீடியோக்களையும் யூட்யூப் தளத்திற்கு மாற்றப்போகிறது.

Symbian Search App: சிம்பியன் இயங்குதள மொபைல்களுக்கு இருந்து வந்த Google Search அப்ளிகேசனையும் நிறுத்தப் போகிறது. அதற்கு பதிலாக மொபைல் உலாவியில் கூகுள் தளத்தை முகப்பு பக்கமாக வைக்க சொல்கிறது.
மேலும் கூகிள் மினி(Google Mini) என்னும் தேடுதலுக்கான வன்பொருள் சாதனத்தையும் இம்மாதம் 31ஆம் திகதி நிறுத்தப் போகிறது.




13.07.2012

பேஸ்புக், டுவிட்டர் தளங்களால் கவலை, அவநம்பிக்கை

 

இங்கிலாந்தின் சல்போர்டு பல்கலைக்கழகத்தின், சல்போர்டு பிசினஸ் ஸ்கூல் சார்பில் சமூக இணைய தளங்களின் பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டது. 

 அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
கருத்து சொன்னவர்களில் பாதிக்கு மேற்பட்டோர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக இணைய தளங்களை பயன்படுத்துவதால் தங்கள் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினர். பலர், அதனால் தங்கள் நிலை மோசமாகி விட்டதாக கருத்து தெரிவித்தனர்.

 தொடர்பில் இருக்கும் நண்பர்களின் சாதனைகள், திறமைகளை அறிந்து ஒப்பிட்டு பார்ப்பதால், தங்கள் நம்பிக்கை குறைந்து விட்டதாகவும், கவலை அதிகரிப்பதாகவும் மூன்றில் இரண்டு பங்கினர் கூறினர்.
பேஸ்புக், டுவிட்டரால் ஓய்வு எடுக்க நேரமில்லை என்றும், தூக்கம் குறைந்து விட்டதாகவும் பலர் தெரிவித்தனர். 

 சமூக இணைய தளங்களில் அதிக நேரம் செலவிடுவதால் பணியிடத்தில் பிரச்னையும், உறவினர்களின் கோபத்தையும் சந்திப்பதாக மூன்றில் ஒரு பங்கினர் தெரிவித்தனர்.

 

13.07.2012

செவ்வாய் கிரகம் அழகானது : நாசா

 
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா, செவ்வாய் கிரகம் தொடர்பான இரு புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அதில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி, கிரேட்டர் ஆகியவை படுஅழகாக காட்சி தருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தப் படங்கள் இரண்டும் வெளியிடப்பட்டன. கிரீலே பனோரமா என்று இதற்குப் பெயரிட்டுள்ளது நாசா.
செவ்வாய் கிரகத்தின் வின்டர் சீசனின்போது இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ரோவர் விண்கலத்தைச் சுற்றிலும் உள்ள செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுவதும் இதில் காட்சியாகியுள்ளது.

நான்கு மாதங்கள் அந்த இடத்தில் ரோவர் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அதாவது 2011 டிசம்பர் 21 முதல் 2012 மே 8 வரை இங்கு ரோவர் விண்கலம் நிலைகொண்டிருந்தது.
ஒரு புகைப்படத்தில் செவ்வாய் கிரகத்தின் தரைப் பகுதி முழுமையாக தெரிகிறது. இந்த கிரேட்டரானது 14 மைல்கள் அதாவது 22 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டதாகும்.

2004 ஜனவரியில் முதன் முறையாக செவ்வாய் கிரகத்திற்குச் சென்றது ரோவர் விண்கலம். அன்று முதல் இதுவரை செவ்வாய் கிரகத்தில் 34.4 கிலோமீட்டர் தூரம் வரை அது பயணித்துள்ளது.




11.07.2012

முன்பக்க வீல் இல்லாமல் தரையிறங்கிய விமானம்!

ஈரான் நாட்டின் தலைநகரான மெஹ்ராபாத் விமான நிலையத்தில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி முன் பக்க வீல் செயழிலந்த நிலையில் அந்த விமானத்தை அதை ஓட்டிவந்த விமானி மிக சாதுர்யமாக தரையிறக்கினார். 94 பயணிகள் மற்றும் 19 விமான ஊழியர்களுடன் அந்த போயிங் 727 விமானத்தில் அப்போது பயணம் செய்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment