04.08.2012
இப்னுமாஜா ஹதீஸ் எண்: 3
எனக்குக் கட்டுப்பட்டவன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவனாவான்,
எனக்கு மாறு செய்பவன் அல்லாஹ்வுக்கு மாறு செய்பவனாவான் என நபி (ஸல்)
அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு: இந்த ஹதீஸோடு, ‘என்னால் நியமிக்கப்பட்ட அமீருக்கு
கீழ்படிந்தவர் எனக்கு கீழ்படிந்தவர் ஆவார். என்னால் நியமிக்கப்பட்ட
தலைவருக்கு மாறுசெய்தவர் எனக்கு மாறுசெய்தவர் ஆவார்’ என்ற வாசகங்கள்
கூடுதலாக, புஹாரி 7137, முஸ்லிம் 4518, அஹ்மத் 7428 ஆகிய நூல்களில் இடம்
பெற்றுள்ளது. மேலும் இப்னுமாஜா 2859 லும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
02.08.2012
“இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்” நபி(ஸல்)
அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி)
நூல்: புகாரி
01.08.2012
"மனிதர்களே ! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது.நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர் வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்குஎதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்லன்." என்றுகூறுவிராக !
(அல்குர்ஆன் 10:108)
31.07.2012
நோன்பு என்பது பெருமை, பொறாமை, கசடு, வஞ்சகம், வழிகேடு, வாக்குமீறல் போன்ற கறைகளைக் களைந்து நாம் இறையச்சம் உள்ளவர்களாக மாறுவதற்குத்தான் கடமையாக்கப் பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். சிந்தியுங்கள். சிந்தித்தால் தெளிவுபெறுவீர்கள். நினையுங்கள் இறைநாமத்தை. நிம்மதி பெரும் உங்கள் உள்ளங்கள். அல்லாஹ் கற்றுத்தருகின்றான்.
‘யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-1903
18.07.2012
நிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்களுக்கு உரிய கூலியை முழுமையாகக் கொடுப்பான் - நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான்.
(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான். (11:111,115)
16.07.2012
ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்; அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன்.
மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.(64:15-18)
15.07.2012
தொழுகையின் அழைப்பிலும், முதல் வரிசையிலும் (கிடைக்கும் சிறப்புகளை) மனிதர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அதன்பிறகு அதற்காக சீட்டுப் போடுவதை தவிர வேறு வழியைக் காணமாட்டார்கள், (ஆகவே) அதற்காக சீட்டுப்போடுவார்கள். முன்னால் முந்திய நேரத்தில் வருவதன் (பலனை) மக்கள் அறிந்தால் அதன்பால் முந்திவிடுவார்கள். இஷாத் தொழுகையிலும் ஸுபுஹுத் தொழுகையிலும் (கிடைக்கும் நன்மைகளை) அவர்கள் அறிவார்களேயானால், அவ்விரு தொழுகை(யை நிறைவேற்றுவதற்)க்காக நடக்க இயலாதவர்கள் அவர்களது கைகள், கால்களில், அல்லது பின்பாகத்தில் நகர்ந்தவர்களாக வருவர் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 268)
14.07.2012
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(1901 புஹாரி)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(1902 புஹாரி)
13.07.2012
உங்களுக்கு தொழுகை நடக்கும் முன்.. நீங்கள்உங்களுக்காக தொழுது கொள்ளுங்கள்....
மனித படைப்பின் நோக்கத்தை அறிந்திடுங்கள்..
படைத்த இறைவனுக்கு நன்றியை செலுத்திடுங்கள்..
குறித்த நேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்..
இறைவனை எப்போதும் நினைவு கூர்ந்திடுங்கள்..
எல்லாத் தொழுகைகளையும் பேணி தொழுதிடுங்கள்..
போர்க்களத்திலும் தொழுகையை நிலைநிறுத்திடுங்கள்..
தொழுகையினால் ஏற்படும் பயன்களை அறிந்திடுங்கள்..
உள்ளச்சத்துடன் உரியநேரத்தில் தொழுகையை நிறைவேற்றிடுங்கள்..
தொழுகையை பேணினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்..
ஜன்னத்துல் ஃபிர்தௌஸில் நிரந்தரமாக தங்க முடியும்..
மறுமையில் முதல் விசாரணை தொழுகையை பற்றியதே..
தொழுகை நம் ஈமானை மேலும் உறுதியாக்குகிறதே..
தொழுகை பாவக் கறைகளை போக்கிடுமே..
மானக்கேடானவற்றிலிருந்து நமை காத்திடுமே..
தொழுகை தீய காரியங்களை களைந்திடுமே..
இறைவனின் மன்னிப்பை பெற்று தந்திடுமே..
இறுதி தீர்ப்பு நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமைந்திடுமே..
நமை எல்லாம் மார்க்கச் சகோதரர்கள் ஆக்கிடுமே..
தொழுகையை விடுவது இணைவைப்போரில் ஒருவராய் நமை ஆக்கிவிடும்..
ஸகர் நரகத்தில் நமை நுழையச் செய்துவிடும்..
தொழுகையை விடுவோர் இறைநிராகரிப்பாளாராக ஆகிவிடுவர்..
மறுமையில் ஃபிர்அவ்ன், ஹாமான் போன்றோரோடு எழுப்பப்படுவர்..
தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எண்ணாதீர்..
அறிவில்லாத மக்களில் ஒருவராக நீங்கள் ஆகிவிடாதீர்..
தொழுகையை விடுவதால் ஏற்படும் விளைவுகளை அறிந்திடுங்கள்..
மனம்வருந்தி ஏகஇறையிடம் பாவமன்னிப்பு தேடிடுங்கள்..
தொழுகை இறைநம்பிக்கையாளருக்கு கடமையாகும்..
அல்லாஹ்விற்கு இது மிக விருப்பமான செயலாகும்..
வாருங்கள் சகோதரர்களே.. தொழுதிடுவோம்..
மார்க்க கடமையினைப் பேணி நடந்திடுவோம்..
நமக்கு தொழுகை நடக்கும் முன் நாம் தொழுதிடுவோம்..
ஸகர் நரகத்திலிருந்து நம்மை காத்திடுவோம்..







No comments:
Post a Comment