04.08.2012
பாவங்கள் மன்னிக்கப்படும் மாதம்
அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.
(2:37) (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(7:23)”எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்”
இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.
அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !
இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.
1 — உலகம் முடியும் காலம் வரை,
2 — மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,
பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால்,பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி-முஸ்லீம்)
3:104 நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்
31.07.2012
சமுதாயத்தின் வலிமையை நிலைநாட்டும் கூட்டுத் தொழுகை
வல்ல இறைவன் அல்லாஹ் தன் அடியார் மீது கடமையாக்கி இருக்கின்ற வணக்கவழிபாடுகளிலெல்லாம் தலையாய வழிபாடு தொழுகை என்னும் வழிபாடாகும், தன்னுடைய எல்லாப் புலன்களையும் ஒருங்கிணைத்து ஒரு இறை நம்பிக்கையாளன் செய்யக்கூடிய இந்த வணக்கம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயலாகும், இந்த தொழுகை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட பின் ஒரு அடியான் நிறைவேற்ற வேண்டிய முதல் கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் நூற்றுக் கணக்கான வசனங்களில் தொழுகையைப் பற்றி வலியுறுத்துகிறான்.
“தொழுகைக்கான அழைப்பை செவியேற்ற பின்பும் கூட்டுத் தொழுகையில் பங்கு பெறாமலிருப்பதற்கு பார்வை இழந்தவருக்குக் கூட அனுமதி வழங்கப்படவில்லை. கண் தெரியாத நபித்தோழர் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து, எனக்கு பார்வை இல்லை, என்னை பள்ளிவாசலுக்கு அழைத்து வருவதற்கு யாரும் இல்லை, எனவே எனக்கு என் இல்லத்திலேயே தொழுகையை நிறைவேற்ற அனுமதி தாருங்கள் என்று கேட்ட போது, அனுமதி வழங்கவில்லை, பாங்கு சப்தத்தை செவியேற்றால் பள்ளிக்கு வந்தாக வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். நூல் : முஸ்லிம்
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய சின்னம் முஸ்லிம்களாலேயே பேணப்படாமலும், மதிக்கப்படாமலும் இருந்து வருகிறது. இஸ்லாமிய சமுதாயம் தொழுகையை நிறைவேற்றுவதிலே, அதிலும் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றுவதிலே மிகவும் பின் தங்கி இருக்கிறது. தொழுகை இஸ்லாமின் மிக முக்கியமான ஒரு கடமை என்பதைக் கூட நிறைய முஸ்லிம்கள் புரியாமல் இருக்கிறார்கள். இதன் காரணத்தினால் சமுதாயம் மிகப்பெரிய சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது.
உறுதியற்ற கொள்கையுடையவர்கள், நயவஞ்சகர்களுக்குத்தான் கூட்டுத் தொழுகை மிகவும் பாரமானதாக இருக்கும். “நயவஞ்சகர்கள் மீது மிகவும் பாரமான தொழுகை இஷா தொழுகையும், பஜ்ர் தொழுகையுமாகும். அந்த இரண்டு தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை உங்களில் ஒருவர் அறிவாரானால் நடக்க முடியாத நிலையிலும் சிரமப்பட்டாவது பள்ளிக்கு வந்துவிடுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: புகாரி, முஸ்லிம்
அனைத்து முஸ்லிம்களும் ஐங்காலத் தொழுகைகளை முறையாக அல்லாஹ்வுடைய பள்ளி வாசல்களில் கூட்டாக நிறைவேற்றுவார்களானால் நிச்சயம் இந்த சமுதாயம் மேன்மை மிக்க சமுதாயமாகவும், வலிமை மிக்க சமுதாயமாகவும் மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
24.07.2012
கொள்கைவாதிகளுக்குள் மறைந்திருக்கும்
சீதனம்!!
கொள்கைவாதிகளே சீதனத்தை திருப்பிக் கொடுத்துவிட்டீர்களா?பல கன்னிப் பெண்கள் கன்னிகளாகவே முதிர்ந்து விட்ட பரிதாபமான நிலமைக்கு எங்கள் இளைஞர் சமுதாயம்; கேள்வி கணக்கு கேட்கப்படும் நாளில் பதில் சொல்லக் கடமைபட்டுள்ளனர்.
தன்னுடைய ஆண்மையை விற்றுவிட்ட இளைஜனை ஆண்கள் என்று அழைக்கலாமா?
இஸ்லாம் ஆணால் கொடுக்கப்படுவதை வலியுறுத்துகிறது. ஆனால் சிலர் சூழ்நிலையை காரணம் காட்டுவதும் இன்னும் சிலர் தற்காலிகமாகவே தங்குகிறோம் என்று சொல்லிச் சொல்லியே ஆயுளை போக்கிக் கொள்கிறார்கள்.
இதனால் தான் பெண் தரப்பினர் வீடு கட்டாயம் கட்டித்தான் ஆகவேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்படகிறார்கள். இன்னும் சிலர் இது கஷ்டமான விடயம் இதை இப்போது மாற்றிவிட முடியாது காலத்தின் போக்கில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றவேண்டும் இப்போது வேறு வழியில்லை ஊரை ஒத்து வாழவேண்டியதுதான் என்று சொல்லிச் சொல்லியே ஒரு நூற்றாண்டும் தாண்டிவிட்டது. ஒருவர் கூட முயற்சியை ஆரம்பித்ததாக தெரியவில்லை.
எடுத்த சீதனத்தை திருப்பிக்கொடுக்கவும் சீதனம் எடுக்காமல் திருமணம் முடிக்கவும் முன்வரமாட்டீற்காலா? அல்லாஹ்வுக்காக!
உத்தம சகாபாக்கள் ஜாகிலியத்தாக காணப்பட்ட ஒரு சமூதாயத்தையே மாற்ற தமது உயிரையே அர்ப்பநித்தார்கல் இஸ்லாத்திட்காக! ஆனால் நாம் ஒரு இஸ்லாமிய சமூகத்திலே உள்ள பிழையை சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ளவும் முன்வர பயப்படுகிறோம்.
ஒவ்வருவரும் தமது பொறுப்புகள் பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்கள்.
முயற்ச்சியில் இறங்குவோமா! நானும் ஒரு இளைஞ்சனே!
18.07.2012
அல்ஹம்து லில்லாஹ் என கூறுவதன் சிறப்புக்கள் என்ன? இறுதிவர படிக்க .
உலகத்தில் வாழக்கூடிய எந்த மனிதனாக இருந்தாலும் தனக்கு ஏதாவது சந்தோஷமான நிகழ்வுகளோ அல்லது பேரைப் புகழைப் பெற்றுத் தரக்கூடிய நிகழ்வுகளோ ஏற்படும் போது அது தன்னுடைய ஆற்றலாலும் அறிவாழும்தான் கிடைத்தது என நினைத்து விடுவதைப் பார்க்கிறோம்.
ஆனால் உண்மையான முஸ்லிமாக ஒருவர் இருந்தால் அவருக்கு இப்படிப் பட்ட நிகழ்வுகள் ஏற்பற்டால் அல்லாஹ் தான் இதை எனக்குத் தந்தான் எனது கையில் எதுவும் கிடையாது என்று நினைத்து அல்லாஹ்வைப் புகழ்வான் அப்படிப் புகழ்ந்தால்த் தான் அவன் உண்மை முஸ்லிமாக இருப்பான்.
ஒருவன் தனக்கு விருப்பமான ஒரு காரியம் நடக்கும் போது அல்லாஹ்வைப் புகழ்ந்தான் என்றால் அவனிடத்தில் பெருமையோ,அல்லது அகங்காரமோ இல்லை என்பதை நாம் தெளிவாக அறிய முடியும்.இதைத்தான் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு அறுவுறித்தியுமுள்ளார்கள்.
- மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்வைப் புகழ்தல்.
- நமக்கு ஒரு கஷ்டம்,அல்லது கவலை நீங்கும் போது அல்லாஹ்வைப் புகழும் படி நமக்கு இறைவன் கட்டலையிடுகிறான்.
எங்களை
விட்டு (எல்லாக்)கவலைகளையும் போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும்;
நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னப்பவன்; நன்றியை ஏற்றுக் கொள்பவன்”" என்றும்
அவர்கள் கூறுவார்கள்.(35:34)
- வாதாட்டங்களில் அடுத்தவரை ஜெயித்தாலும் அல்லாஹ்வைப் புகழ்தல்.
- அடுத்தவனுக்கு நன்மை ஏற்பட்டதற்க்காக இறைவனைப் புகழ்தல்
- சாப்பிட்டு முடித்தவுடன் அல்ஹம்துலில்லாஹ்
- தும்மியவுடன் அல்லாஹ்வைப் புகழ்தல்.
அல்ஹம்து லில்லாஹி என்பதன் அளவு எவ்வளவு?
இந்த அல்ஹம்து லில்லாஹ் என்ற வார்த்தையை நாம்
சாதாரனமாக என்னுகின்ற காரணத்தால்தான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல்
இருக்கிறோம்.
ஆனால் இந்த அல்ஹம்து லில்லாஹ் என்ற வார்த்தை நாளை
மறுமையில் நம்முடைய நன்மையின் தராசை நிறப்பிவிடும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.சுத்தம் என்பது
ஈமானில் ஒரு பகுதியாகும்,இன்னும் அல்ஹம்து லில்லாஹ் என்பது (நன்மையின்)தராசை
நிறப்பக் கூடியதாகும்.
அறிவிப்பவர் : அபூ மாளில் அல் அஷ்அரீ, நூல்:
முஸ்லிம்(328)
15.07.2012
உறவுகளைப் பேணுவோம்
ஈமானுடன் சம்பந்தப்பட்டது:
இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும்.
“யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வுடன் தொடர்பு :அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி
அல்லாஹ்வுடன் தொடர்பு :அல்லாஹுதஆலா இரத்த உறவைப் பார்த்து “யார் உன்னைச் சேர்ந்து நடக்கிறானோ நான் அவனைச் சேர்த்துக் கொள்வேன். யார் உறவைத் துண்டித்துக் கொள்கின்றானோ நான் அவனுடன் தொடர்பைத் துண்டித்து விடுவேன்” என்று கூறினான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி
சுவனத்தில் நுழைவிக்கும்:
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள்,
“நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஸகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள்.
அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
இரண விஸ்தீரனம் : யார் தனக்கு றிஸ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அனஸ்(ரலி)
ஆதாரம் : புகாரி, முஸ்லிம்
14.07.2012
தொழுகையை விடுவது நரகம் செல்வதற்கு முக்கிய காரணமாகும்....................
சுவனவாசிகள் குற்றவாளிகளிடம் கேட்பார்கள் உங்களை ஸகர் என்ற நரகத்தில் நுழையவைத்தது எது? (என்று) அதற்கவர்கள், தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை என்று கூறுவார்கள்.
அல்குர்ஆன் 74:40-43
இவர்களுக்குப் பின்னர் (வழிகெட்ட) தீய பின் தோன்றல்கள் இவர்களுடைய இடத்தை அடைந்தார்கள், தொழுகையை(த் தொழாது) வீணாக்கினார்கள், மனோ இச்சைகளையும் பின்பற்றினார்கள், ஆகவே அவர்கள் (மறுமையில்) பெரும் தீமையைச் சந்திப்பார்கள்.
அல்குர்ஆன் 19:59
தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்.
இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள்.
அல்குர்ஆன் 23:9-11
தொழுகையை வேண்டுமென்றே விடக்கூடியவன், தொழுவதற்குறிய உடல் ஆரோக்கியம் இருந்தும் தொழாமலிருந்தவன், தொழுகையை தொழுகையாளியை ஏளனமாக கருதியவன், தொழுகையாளியை கிண்டலும் கேலியும் செய்பவன் முஸ்லிம்களின் சகோதரன் அல்ல. இது போன்ற மனிதர்களுடன் குடியிருக்க நேரிட்டால் அவர்களுக்கு தொழுகையை விடுவதினால் ஏற்படும் விளைவுகளை இறை வசனங்களையும் நபிமொழிகளையும் எடுத்துக்கூறி தொடர்ந்து அவர்களுக்கு உபதேசித்து கொண்டே இருக்க வேண்டும்.
அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.
அல்குர்ஆன் 9:11
ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, 'அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்' என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)
நூல்: புகாரீ 1143
11.07.2012
வரதட்சணை! ஒரு நவீன யாசகம்!
வரதட்சணை எனும் நவீன யாசகம்..
சமுதாயம் எங்கும்; மலிந்து கிடக்கும் வாசகம்..
கன்னியரை மணமுடிக்க..
காளையர்கள் கேட்கும் யாசகம்…
தன் இயலாமையை சொல்லி யாசிப்பவன் யாசகன்..
தன் பெருமையைச் சொல்லி யாசிப்பவனோ மணமகன்..
பெண்ணின் முதுகெலும்பாக இருக்கவேண்டியவன் நீ..
பெண்ணிடமே முதுகெலும்பில்லாமல் யாசிக்கிறாய் நீ..
உன்னால் உருவாகுமே சமுதாயத்தில் முதிர்கன்னிகள்..
உதிக்குமோ அவர்களின் வாழ்க்கையில் விடிவெள்ளிகள்..
கால்நடையை தான் விலை பேசுவர் சந்தையிலே..
மனிதனையும் விலை பேசுகின்றனரே மணச்சந்தையிலே.
ஓரிரவு சேர்ந்து வாழ விலை கேட்பவள்.. விலைமகள்..
வாழ்க்கை முழுதும் சேர்ந்து வாழ..
விலை கேட்கும் நீ.. விலைமகனா??
மணமகளுக்கு மணக்கொடையினை..
மனமுவந்து அளித்திடுங்கள்.. எனும்..
மார்க்கம் காட்டிய வழி இருக்கு..
வேண்டாம் இந்த வரதட்சணை நமக்கு..
ஆறறிவு பெற்ற மக்களா?? இல்லை..
ஐந்தறிவு கொண்ட மாக்களா???
சிந்தையில் இறைவேதம் நுழையாதோ..?
சிந்தனையில் தெளிவு பிறக்காதோ??
இருமனங்கள் இணைவது தான் ஆனந்தம்..
திருமணத்தில் கூடாது வணிக பேரம்..
சிந்தனையை சீரமைத்து யோசியுங்கள்..
சிரம் தாழ்த்தி இறைவனிடம் மட்டுமே யாசியுங்கள்..






No comments:
Post a Comment