04>பொதுவான பார்வை


18.07.2012

கடவுள் இருக்கின்றார், 99.9 % உருதிபடுத்தியுள்ளது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்!

 

கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி.

 

இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை.
ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் ‘சக்தியோடு’ அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம்.

 ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத ‘சூப்பர் ஸ்டார்’ தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.


இதையடுத்தே ஹிக்ஸ் போஸானை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடங்கின. அமெரிக்காவில் தான் முதலில் இந்த ஆய்வுகள் நடந்தன. பல ஆண்டுகள் நீடித்த இந்த சோதனைகள் எந்த முடிவையும் எட்டாததால், அந்த ஆய்வுகளுக்கு நிதி தருவதை அமெரிக்க அரசு நிறுத்திவிட்டது.

இதைத் தொடர்ந்தே பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவா அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) அமைத்த மாபெரும் வட்ட சுரங்க ஆய்வகத்தில் இந்தச் சோதனைகள் தொடங்கின.

அணுத் துகள்களுக்கு நிறையைத் தருவதாகக் கருதப்படும் ஹிக்ஸ் போஸான் தான் நம்மைச் சுற்றியுள்ள இந்த பேரண்டத்தின் பெரும் பகுதியை நிறைத்திருக்கிறது. இதனால் பாதிக்கப்படாத ஒரே அணுத் துகள் ஒளிக் கதிர்களான போட்டான்கள் மட்டுமே. இதனால் தான் போட்டான்களுக்கு நிறை இல்லை. மற்ற எல்லா அணுத் துகள்கள் மீதும் இந்த ஹிக்ஸ் போஸான் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி நிறையைத் தந்துவிடுகிறது என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி.

ஆனால், அதில் விடுபட்டு நிற்கும் ஒரே கேள்வி அணுத் துகள்களுக்கு நிறையைத் தரும் ஹிக்ஸ் போஸானின் எடை என்ன என்பதே. (நிறை என்றால் என்ன?. ஒரு பொருளின் எடை மைனஸ் புவிஈர்ப்பு விசை தான் நிறை. அதாவது நமது எடை 55 கிலோ என்றால் நம் உடலின் மீது புவிஈர்ப்பு விசை செலுத்தும் இழுவிசையைச் சேர்த்தது தான் 55 கிலோ எடை. இதில் புவிஈர்ப்பு விசையை கழித்துவிட்டால் மிச்சமிருக்கும் எடையே நிறை)
பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழி.

 அதன் எடையைக் கண்டுபிடிப்பதே. இந்த ஆய்வைத் தான் CERN நடத்தியது.
இதற்காகத் தான் சிறிய அளவிலான Big Bang வெடிப்பை செயற்கையாக நடத்திப் பார்த்தனர். இதற்காகத் தான் நியூட்ரான்-புரோட்டான்களின் அதி பயங்கர மோதலை நடத்தினர். இந்த மோதலில் வெடித்துச் சிதறிய பல்வேறு அணுத் துணைத் துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) தேடினர்.

ஸ்டாண்டர்ட் மாடல் தியரியின் படி ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் (GeV) என்ற அளவில் இருக்க வேண்டும். அதாவது அணுக்களுக்குள் இருக்கும் துணைத் துகளான புரோட்டானின் எடையை விட 125 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
CERN விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சியில் 125.3+ GeV எடை கொண்ட துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 99.999% ஹிக்ஸ் போஸானாகத் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள்.


-இணையதள பத்திரிக்கையில் வெளியான செய்தி
இது குறித்து TimesNow வெளியிட்டுள்ள வீடியோ செய்திhttp://timesofindia.indiatimes.com/home/science/God-particle-CERN-Scientists-find-new-particle-probably-the-Higgs-boson/articleshow/14671907.cms


14.07.2012




ஜப்பான் சுனாமியும், அணுக்கசிவும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளே!


மார்ச் 11 ஆம் திகதி ஜப்பானை பாரிய பூமியதிர்ச்சியும், சுனாமியும் தாக்கியது. இவற்றின் விளைவாக ஜப்பானின் புகுஷிமா மாகாணத்தின் கடலோரத்தில் அமைந்துள்ள டாய்ச்சா அணுமின் நிலையத்தின் குளிரூட்டும் இயந்திரங்கள் செயலிழந்து போக அணு உலைகள் சூடேறி வெடிக்க ஆரம்பித்துள்ளன. சுனாமி தாக்குதல், பூமியதிர்ச்சி என்பன ஜப்பானுக்குப் பழகிப் போன அம்சங்களாகும். ஆனால், ஜப்பானின் அணுக் கசிவு என்பது ஜப்பானை மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 குறிப்பாக ஜப்பானின் அண்டை நாடுகள் பீதியில் உறைந்து போயுள்ளன.இந்த முயற்சி தோல்வியுற்றால் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஏற்பட்டதை விட அதிக இழப்புகளைச் சந்திக்க நேரிடுமென அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் முன்னணியில் இருக்கும் ஜப்பானின் தொழில் நுட்பத்தின் கதியே இதுவென்றால் சாதாரண நாடுகளின் அணு உலைகள் இது போன்ற பேரழிவுகளுக்குத் தாக்குப் பிடிக்கக் கூடியவைதானா என்ற ஐயம் பல நாடுகளிலும் எழுந்துள்ளது.

 சுமார் 32 நாடுகளில் 450 அணு உலைகள் இயங்கி வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.பொதுவாக அணு உலைகள் கடற்கரைப் பிரதேசங்களில்தான் அமைக்கப்படும். ஜப்பான் அடிக்கடி சுனாமி மற்றும் நில நடுக்கத்துக்கு உள்ளாகும் நாடாகும். ஜப்பானில் நிறுவப்பட்ட அணு உலைகள் 7.0 றிச்டர் அளவுக்குக் குறைவான பூகம்பங்களை மட்டுமே தாக்குப் பிடிக்கும் தொழில் நுட்பத்தைக் கொண்டதாகும்.

ஜப்பானிய அணு உலைக் கசிவு என்பது உலகு சந்திக்கும் நான்காவது அணுக் கசிவு ஆபத்தாகும். 1969ல் சுவிட்ஸர்லாந்தின் லு சென்ஸ் அணு உலையும், 1979ல் அமெரிக்காவின் த்ரிமைல் தீவு அணு உலையும், 1986ல் ரஷ்யா உக்ரைனின் செர்னோபில் அணு உலையும் வெடித்தன. இவற்றின் பாதிப்புகளுக்கு அந்தந்த நாடுகள் மட்டும் அன்றி அயல்நாடுகளும் உள்ளாகின.

 இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது அமெரிக்கா ஜப்பானில் போட்ட இரு அணு குண்டுகளின் தாக்கம் இன்றும் கூட இருக்கின்றது. இந்த வகையில் அணுக் கசிவு ஆபத்து என்பது கற்பனை பண்ணிப் பார்க்க முடியாத அழிவாகும்.

இதில் சிந்திக்க வேண்டிய அம்சம் என்ன என்றால், ஜப்பான் பூகம்ப பூமியென்பதால் கடுமையான பூகம்பம் ஏற்பட்டால் அணு உலைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா? என டாய்ச்சா அணு உலை அமைக்கப்படும் போது வினவப்பட்டது.

அப்போது, ‘இந்த அணு உலையை அசைக்கக் கூடிய அளவுக்கு பெரும் நில நடுக்கம் ஏற்படாது!’ என ஜப்பான் அரசு பதிலளித்தது.
மனிதன் என்னதான் தொழில் நுட்பத்தில் முன்னேறினாலும் தனக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை மறந்து பேசலாகாது.

டைட்டானிக் கப்பலைத் தயாரித்தோர் ‘கடவுளால் கூட இந்தக் கப்பலை ஒன்றும் செய்ய முடியாது!’ என அதன் தொழில் நுட்பம் குறித்துப் பேசினர். முதல் பயணத்திலேயே உலகுக்குச் சோகம் மிக்க அழிவை அது தந்தது.





13.07.2012

முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா?


 சினிமா என்பது ஒரு பொழுது போக்கு என்ற நிலை தாண்டி மிக சக்தி படைத்த மக்களின் உள்ளங்களை திசை திருப்பும் ஊடகமாக மாறிவிட்டது என்பதால் அதையும் அவதானிப்பது எமக்கு தவிர்க்க முடியாத விடையமாகி விட்டது.

 உலக வரலாற்றில் குறிப்பிட்ட சமூகத்தின் மீது தங்களுடைய ஆதிக்கத்தை நிறுவ விரும்பும் தனிநபர்கள், குழுக்கள்  வன்முறையை மட்டும் கைக்கொண்டு அதை நிறைவேற்றுவதில்லை. பல்வேறு கருத்தோட்டங்களைத் தங்களுக்குச் சாதகமான பின்னணியாகக் கைக்கொள்வதும் உண்டு. அத்தகைய கருத்தோட்டங்களில் சில உண்மைகள் திரித்தும்  கலந்துமிருக்கும். சில முற்றிலும் வதந்திகளாகவும் இருக்கும். நம்முடைய சமகாலத்திற்கான எடுத்துக்காட்டாக  இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும், இந்து பாசிசத்தையும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்    என்னும் பிரச்சாரத்தையும்  கூறலாம்.

நடிகர் கமலின்- உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் – இந்துப் பாசிசத்தின் இன்னொரு பிரதி:
 ஆரம்பப்பள்ளியின்  ஆண்டுவிழா ஒன்றை கொஞ்ச காலத்துக்கு முன்பு காண நேர்ந்தது. தீவிரவாதிகளை விரட்டியடிக்கும் தேச பக்தர்கள் பாத்திரத்தில் குழந்தைகள் நடித்தார்கள். தீவிரவாதிகளாக நடித்த குழந்தைகள் நான்கு பேரும் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வைத்திருந்தார்கள். தொப்பி என்பது மட்டுமே அவர்களைத் தீவிரவாதிகளாக காட்டிக்கொள்ளப் போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு வேடம் போட்டுவிட்ட ஆசிரியர்கள் அவ்விதம் நினைத்திருக்கிறார்கள். இது அறியாமையால் நிகழும் ஒன்றல்ல.

 இந்த இந்து இந்திய ஆதிக்க மனோபாவத்தை நியாயப்படுத்தியும்,ஒடுக்கப்படும் தேசிய இனமான இஸ்லாமியர்களை மலினப்படுத்தியும் சித்தரிக்கும் திரைக்காவியம்தான் உன்னைப்போல் ஒருவன்.

 இந்திய பார்ப்பன மனநிலையும், பார்ப்பனியத்தை உள்வாங்கிக்கொண்ட மிடிள் கிளாஸ் மனநிலையும் எப்போதும் ‘சமூக அக்கறை’ விஷயத்தில் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவர்களின் பிரச்னை எல்லாம் சாலையில் ஸ்டாப் லைனைத் தாண்டி வண்டியை நிறுத்தக்கூடாது, தெருவில் எச்சில் துப்பக்கூடாது, சிக்னலில் பிச்சை எடுக்கக்கூடாது, பொது இடங்களில் உரக்கப்பேசக்கூடாது… இவைகள்தான். அதுவெல்லாம் நடந்தால் அவதாரங்கள் எடுத்து அழித்தொழிப்பார்கள்.



 கமல் கட்டமைக்க விரும்பும் தீவிரவாதம் குறித்த கருத்து அப்பட்டமான பாஸிஸத்தன்மை உடையது . தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் அதிகாரியின் பெயர் ‘ஆரிஃப்’ என்ற உடனேயே மல்லாந்துப் பார்த்து பெருமூச்சு விடுகிறார். ‘ஆரிஃப் மீது ஒரு கண் இருக்கட்டும்’ என்று மோகன்லால் கேரக்டர் சொல்கிறது. ஆனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் செல்லும்போது கமல் தன் பெயராகச் சொல்வது சீனிவாச ராமானுஜம். தன் காதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுக்கும் போலிப் பெயரைக் கூட ஸ்ரீரங்கத்து மண் வாசனையோடுத் தேர்ந்தெடுக்கும் கமல், ஆரிஃப் என்ற பெயரைக் கேட்டதும் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் இற்று விழுகிறது கமலின் முற்போக்கு பூச்சு.

 தீவிரவாதத்துக்குத் தீவிரவாதம்தான் தீர்வு என்றால் அவர்களும் அதைத்தானே செய்கிறார்கள? முஸ்லீம் செய்தால் தீவிரவாதம், நீ செய்தால் தேசப்பற்றா? ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ பற்றி ரொம்ப கவலைப்படும் கமல்ஹாசனை, நாள்தோறும் தமிழகத்திலும், இந்தியாவிலும் நடந்துவரும் ஆயிரக்கணக்கான இந்து மத, ஆதிக்க சாதிய ஒடுக்குமுறைகள் எவ்விதத்தில் பாத்திருக்கின்றன? அதைப்பற்றி எப்போதாவது வெளிப்படையாகப் பேசியதுண்டா? பேசியிருக்கிறார்...
 தென் மாவட்ட கலவரங்கள் துளிர்விடுவதற்கு முன்பாக ‘தேவர் மகன்’ என்ற தேவர் சாதிப் பெருமை பேசும் திரைப்படத்தை உருவாக்கினார். அதில் இளையராஜா என்னும் தலித்தைப் பயன்படுத்தி ‘போற்றிப் பாடடி பெண்ணே..’ என்ற தேவர் சாதிக்கான தேசிய கீதத்தை உருவாக்கித் தந்தார். அதே தந்திரக்கார புத்திதான் இப்போது மனுஷயப்புத்திரன் (எ) ஹமீது என்னும் இஸ்லாமியரைப் பயன்படுத்தி உன்னைப்போல் ஒருவனில் பாடல் எழுத வைத்திருக்கிறது.

 ‘இந்த கொடுமையான படம் முடிந்ததே’ என்று வெளியேறினால் கமல்ஹாசன் மகள் ஸ்ருதியின் இசையில் டைட்டில் கார்டுக்கு பின்னால் ஒலிக்கிறது. ‘சம்பவாமி யுகே, யுகே..’ என்னும் பாடல். ‘யுகங்கள் தோறும் பிறப்பெடுப்போம்’ என்று அர்த்தமாம். ஒண்ணுக்கேத்… இதுல யுகங்கள் தோறுமா?






No comments:

Post a Comment