09>முஸ்லிம்கள் எழுப்பும் சில முக்கிய கேள்விகளும் பதில்களும்..
20.07.2012
நேற்று இரவு தௌஹீத் ஜமாஅத் தினால் நடத்தப்பட்ட ஐயமும் தெளிவும் என்ற கருப்பொருளில் மதிற்பிற்குரிய மருதமுனை தௌஹீத் ஜமாஅத்தின் (IPC) ன் தலைவர் முபாரக் மதனி அவர்களினால் சொற்ப்பொழிவு நடாத்தப்பட்டது.
இதில் பல ஊர் மக்களும் வருகை தந்திருந்தனர். அத்தோடு நூற்றுக்கணக்கான மருதமுனை வாழ்மக்களும் பல இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்த சகோதரர்களும் ஒற்றுமையுடன் கலந்து ஆதரவளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
அதில் முக்கியமான ஒரு கேள்வி சபா எனும் சகோதரரால் கேட்கப்பட்டது. அதை கீழே படிக்க...
அனைத்து உம்மத்தினர்களையும் சகோதரத்துவத்துடன் பார்ப்பதையே இஸ்லாம் வலியுருத்துகிறது.
அப்படியிருக்கையில் ஏனைய இஸ்லாமிய இயக்கங்களுடன் பகிரங்க விவாதம்களை நீங்கள் ஏற்படுத்தும் பட்சத்தில் அவர்களுக்கு உங்களுடன் முரண்பாடல்லவா ஏற்படும்? அப்படிஎன்றால் சகோதரத்துவத்திட்கு வழி என்ன?
பதில் - முஸ்லிம்கள் அனைவரும் ஓர் உடலைப் போன்றவர்கள். அதில் ஒரு உறுப்புக்கு வலி ஏற்ட்பட்டால் உடல் முழுவதும் வலிக்கிறது இப்படித்தான் முஸ்லிம்கள் இருக்க வேண்டும் என்று நபி ஸல் அவர்கள் கூறியிருக்கிறார். சகாபாக்களும் பல விடயங்களை வெளிப்படையாக விவாதித்திருக்கிறார்கல்.
தவறான சிந்தனைகளை பரப்பி கேள்விகள் கேட்பதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல் அவர்களுடைய சிந்தனைகளை குழப்பிவிட்டு செல்லும் போதுதான் மக்களுக்கு ஒரு தெளிவை கொடுப்பதட்காகத்தான் விவாதங்களுக்கு அழைக்கிறோமே தவிர விவாதங்களினால் மற்றவர்களை இழிவுபடுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. கருத்துக்களை பரிமாறி நல்லிணக்கத்துக்கு வரவேண்டுமே தவிர இது முரண்பாடுகளையும் சண்டைகளையும் உருவாக்குவதர்க்கல்ல.
Subscribe to:
Comments (Atom)

No comments:
Post a Comment